என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் ேபாலீசாரை தாக்கிய சிறுவர்கள் கைது

- காரைக்காலில் ேபாலீசாரை தாக்கிய சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி பூவம் சிவன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பிரகாஷ்(36). இவர் காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜீப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி அதிகாலை 12.05 மணிக்கு, சொந்தவேலையாக காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் சந்தைதிடலருகே மோட்டார் சைக்களில் சென்று போது மர்ம நபர்கள் தாக்கி செல்போனை பறித்து சென்றனர்.
இதுகுறித்து பிரகாஷ், காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் திருட்டுப் போன பிரகாஷின் செல்போன் சிக்னலை வைத்து, காரைக்கால் நகர் பகுதியில் நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த அத்திக்கு ரகுமான் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.