search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை எரிப்பதால் நோய் தொற்று  பரவும் அபாயம்
    X

    பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை எரிப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்

    • குப்பை கழிவுகளை இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியில் கொட்டி அழிப்பதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.
    • மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு குப்பை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும்

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அமாமனிமல்லாபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் வீட்டுக் கழிவுகள், அழுகிய உணவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், என டன் கணக்கில் பனந்தோப்பு பகுதியில் மலை போல் கொட்டி தீயிட்டு எரிப்பதால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது மட்டுமின்றி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பனை மரங்களை அதிக அளவு இருக்கும் பகுதியில் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை உண்டாக்கும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியில் கொட்டி அழிப்பதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு குப்பை கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×