என் மலர்
உள்ளூர் செய்திகள்
சின்னசேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு
- 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்.
- இடைஞ்சலாகவும் இருப்பதாக கூறி ஆட்டோக்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் அருகே ஆட்டோவை நிறுத்தி வந்தார்கள். இதனால் போக்குவரத்து இடையூறாகவும், பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும் இருப்பதாக கூறி ஆட்டோக்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் தற்காலிகமாக ஆட்டோவை நிறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பேரூராட்சி முன்பு திடீரென 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.