என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாத்தனூர் அணை நிரம்பியது: தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது.
- அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாள ர்களுக்கு சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு தண்ணீரினை திறந்து விட உள்ளோம். அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும். இந்த நேரத்தில் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் ஆற்றினை கடக்கவும் அனுமதிக்க கூடாது.
ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.