என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி அரசு பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

- சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய திருவள்ளுவர் சிலையை அவரது சொந்த செலவில் அமைத்தார்.
- இந்த சிலை திறப்பு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்று வட்டாரங்களில் இருந்து 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தருகின்றனர்.
மேலும் இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி அளித்து வருகின்றனர். பி.டி.ஏ. நிர்வாகமும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கல்வியிலும் விளையாட்டிலும் பல்வேறு வளர்ச்சி பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல ஆண்டுக்கு முன்பு ஈரோடு பகுதியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஜெயராமன் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றினார். பின்பு ஒய்வு பெற்று ஈரோடு சென்று விட்டார்.
பின்னர் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் புதிய திருவள்ளுவர் சிலையை அவரது சொந்த செலவில் அமைத்தார்.
இந்த சிலை திறப்பு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தேகவுடா, பி.டி.எ. தலைவர் ராமன், துணைத் தலைவர் ஷானு, செயலர்கள் சுதாகர், சேகர், தி.மு.க. மாநில இளைஞர் அணி சீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷீத், தொழில் அதிபர்கள் கோபால், மண்னா, சீனிவாசன், பச்சமூத்து, செந்தில்குமார், மகேஷ், தங்கவேலு, இந்துஸ்தான் மேலாளர் ராமசந்திரன், சூளகிரி மன்ற தலைவர் கலைசெல்வி ராமன், மற்றும் ஆசிரியர்கள் ராமசந்திரன், சதீஷ், செல்வம், மூகமதுஅலீ, கோவிந்தராஜ், ரங்கநாயகி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.