என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காரைக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு காரைக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/08/08/1928880-aaiu.webp)
காரைக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாதத்திற்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
- 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார்
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன் பதவியேற்ற நாள் முதல், பல்வேறு அரசுத்துரைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேரு நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம், இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிப்புற சிகிச்சை பிரிவில் எத்தனை நோயாளிகள் தினமும் வருகிறார்கள்? மாதத்திற்கு எவ்வளவு நோயாளி கள் வருகிறார்கள் என்று கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகள் தங்குவதற்காக 3 படுக்கைகள் இருந்த அறையை ஆய்வு மேற்கொண்டார், அறை உபயோகத்தில் இருந்தாலும், இல்லா விட்டாலும், தினசரி சுத்தமாக பராமரிக்கவேண்டும். போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும். மேலும் விடுபட்ட குழந்தைகளுக்கு மாதந்திர தடுப்பு ஊசியை அவசியம் போட வேண்டும். சுகாதாரநிலையம் முழுவதும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்றார்.