என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு-ராஜா எம்.எல்.ஏ. சீர்வரிசைகள் வழங்கினார்
- குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
- ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைதுறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ளபடி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மருத்துவ அலுவலர் சூர்யா கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி வாழ்த்தினார். விழாவில் வார்டு செயலாளர்கள், வீராசாமி, சிவா, வக்கீல் செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு கணேஷ், ஜெயக்குமார், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் மணிகண்ட பிரபு, ஒன்றிய இளைஞரணி முருகையா பாண்டியன் மற்றும் ஒன்றிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் மல்லிகா, செல்வம் மற்றும் முத்துப்பாண்டி மற்றும் அங்கன்வாடி பணி யாளர்கள், கர்ப்பிணி பெண்கள், அவர்களுடைய குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.