என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![`ரீல்ஸ் மோகத்தால் போலீசில் சிக்கிய 4 சிறுவர்கள் `ரீல்ஸ் மோகத்தால் போலீசில் சிக்கிய 4 சிறுவர்கள்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9146506-newproject12.webp)
`ரீல்ஸ்' மோகத்தால் போலீசில் சிக்கிய 4 சிறுவர்கள்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- சிறார் நீதிமன்றத்தில் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
- 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் கைது.
நெல்லை:
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 7-ந்தேதி மாலை 6.50 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது.
அந்த ரெயில் இரவு 8 மணி அளவில் காயல்பட்டினத்தை கடந்து வீரபாண்டியன்பட்டனம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள கம்பி வேலி அமைக்க பயன்படுத்தப்படும் 3 கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து என்ஜின் டிரைவர், அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் சக்கரங்கள் 2 கற்களில் ஏறி உடைத்துவிட்டு நின்றது.
இதையடுத்து தகவலை நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு அவர் தெரிவித்தார். பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? நாசவேலைக்காக கற்களை வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது வீரபாண்டியன்பட்டினம் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், வாலிபர்கள் 2 பேரும் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயில் ஏறுவதை 'ரீல்ஸ்' வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக திட்டமிட்டிருந்ததும், அதன்படி தண்டவாளத்தில் கல் மீது ரெயில் ஏறுவதை அவர்கள் வீடியோ எடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதில் 2 பேர் சிறார்கள் என்பதால் நீதிபதிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிறார் நீதிமன்றத்தில் சுமார் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
பள்ளிக்கு சென்று படிப்பது, வாழ்வில் முன்னேறுவது குறித்து அறிவுரை கூறப்பட்டது. மேலும் கைதான 2 வாலிபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.