search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தென்காசி ரெயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்
    X

    தென்காசி ரெயில் நிலைய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்த காட்சி.

    அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தென்காசி ரெயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்

    • பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • தென்காசி ரெயில் நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.

    தென்காசி:

    நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரெயில் நிலையங்களை புனரமைக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே அமைச்சகம் ரூ.24,470 கோடிக்கு மேல் ஒதுக்கியது. இந்த பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

    தமிழகத்தில் தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி ரெயில் நிலையத்தின் அபிவிருத்தி ரூ.7.08 கோடியில் நடைபெறுகிறது. அதாவது ரெயில்

    நிலையத்தின் 2-வது நுழைவாயிலை அபிவிருத்தி செய்தல், அந்த நுழை வாயிலில் புதிய நிலையக் கட்டிடத்தை நிர்மாணித்தல், அணுகு சாலைகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.

    விழாவில் தனுஷ் குமார் எம்.பி., பழனி நாடார் எம்.எல்.ஏ., தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர், அமர்சேவா சங்கம் ராமகிருஷ்ணன்,

    கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் ரமேஷ் பாபு, தென்காசி பா.ஜனதா மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×