என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தொடர் விடுமுறையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
Byமாலை மலர்1 Oct 2023 2:59 PM IST
- சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- முன்தினம் இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கி ழமை, காலாண்டு பள்ளி விடுமுறை, ஞாயிறு, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணி முதல் திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
Next Story
×
X