என் மலர்
உள்ளூர் செய்திகள்
அலகு குத்தி நேர்த்திக்கடன் செய்த முருக பக்தர்கள்
- புஷ்பக் காவடி எடுத்தல், தால் அலகு நாக்கு அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- மேளதாளம் முழங்க தெப்பக்குளம் சென்று முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டபட்டியில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினசரி மூன்று கால சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை அணிந்து விரதம் இருந்து முருக பக்தர்களுக்காக ஆற்றில் கங்கணம் கட்டுதல், காவடி ஆலங்கரித்தல் சக்தி கிரகம் அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை பூ கிரகம் எடுத்தல், மார்பில் ஆட்டாங்கல் வைத்து மஞ்சள் இடத்தில், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எடுத்தல், தால் அலகு நாக்கு அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் மேளதாளம் முழங்க தெப்பக்குளம் சென்று முக்கிய வீதி வழியாக வந்து மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி மணி உட்பட பலர் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.