என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தருமபுாி செட்டிகரை பொறியியல் கல்லூாியில் அறிவியல் கண்காட்சி தருமபுாி செட்டிகரை பொறியியல் கல்லூாியில் அறிவியல் கண்காட்சி](https://media.maalaimalar.com/h-upload/2022/06/24/1718142-015.jpg)
X
தருமபுாி செட்டிகரை பொறியியல் கல்லூாியில் அறிவியல் கண்காட்சி
By
மாலை மலர்24 Jun 2022 3:41 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.
- பொறியியல் துறையான ஆா்வத்தை மாணவா்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கண்காட்சியை கண்டு களித்தனா்.
தருமபுரி,
தருமபுாி அடுத்துள்ள செட்டிகரை பொறியியல் கல்லூரியில் மெக் கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறை களின் சாா்பில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவா்கள் அறிவியல் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
மேலும் பொறியியல் துறையான ஆா்வத்தை மாணவா்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கண்காட்சியை கண்டு களித்தனா்.
சோலாா் மூலம் இயக்கப்ப டும் மின்மோட்டாா் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் தானியங்கி எந்திரம், ரோபோ, சென்சா் மூலம் டிராபிக் கண்ட்ரோல், விபத்தை தடுக்கும் வகையில் அலாரம், சுற்றுசூழல் குறித்த பலவகையான தொழில்நுட்பத்தினை பொறியியல் மாணவா்கள் கண்டுபிடித்து பாா்வைக்கு வைத்தனா்.
கண்காட்சியை கல்லூாி முதல்வா் சுமதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தாா்.
Next Story
×
X