என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ். ஆர். வெற்றிவேல் கலந்து கொண்டு பேசிய காட்சி.
தருமபுரி நகர அ.தி.மு.க.நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- எம்.ஜி.ஆர். 106 வது பிறந்தநாள் விழாவை தருமபுரி நகரில் 33 வார்டுகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர அவை தலைவர் அம்மா வடிவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்று பேசினார். நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகர துணை செயலாளர்கள் அறிவாளி, மலர்விழி, நகர பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ். ஆர். வெற்றிவேல் கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். 106 வது பிறந்தநாள் விழாவை தருமபுரி நகரில் 33 வார்டுகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, விழாவையொட்டி அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து சிறப்பாக பணியாற்றுவது, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் வார்டு செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.