என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபயிற்சி செல்ல அனுமதி மறுப்பு
- பயிற்சி பெறும் மாணவர்கள் இங்கே மர நிழல்களில் அமர்ந்து படித்து வருவதும் வழக்கம்.
- கடந்த 20 நாட்களாக நடைபயிற்சி செல்வத ற்கும், குரூப் தேர்விற்காக படிப்பதற்கும் காவலாளி கேட்டை பூட்டிவைத்து அனுமதிக்கவில்லை
தருமபுரி,
தருமபுரி அரசு கலைக்க ல்லூரி மைதானத்தில் காலையிலும், மாலையிலும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
அரசு கலைக்கல்லூரி அருகேயுள்ள ராயல் நகர் ஒட்டப்பட்டி, ஏமகுட்டியூர் பகுதியில் வசித்து வரும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் நடைபயிற்சி சென்று வந்தனர்.
இதே போல குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் இங்கே மர நிழல்களில் அமர்ந்து படித்து வருவதும் வழக்கம். இங்கே மரத்திற்கு அடியில் அமர்ந்து படித்தவர்கள் குரூப் தேர்வுகளில் தேர்ச்சி யடைந்து அரசு பணிகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களாக நடைபயிற்சி செல்வத ற்கும், குரூப் தேர்விற்காக படிப்பதற்கும் காவலாளி கேட்டை பூட்டிவைத்து அனுமதிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மீண்டும் நடைபயிற்சி செல்வதற்கும், குரூப் தேர்வுகளுக்கு படிக்கவும் அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.