என் மலர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி உள்விளையாட்டு அரங்கில் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் ஜிம்னாஸ்டிக்போட்டி
- ஜிம்னாஸ்டிக் போட்டி 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
- இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில்12- வது மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட 32 மாவட்டங்களைச் சேர்ந்த 8 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
ஜிம்னாஸ்டிக் போட்டி 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றது.
இதில் மாணவர்களுக்கு புளோர், டேபிள்வால்ட், பம்மல் ஆர்ட்ஸ், ரோமன் ரிங், பேர்லர் பார், ஹை பார், உள்ளிட்ட பிரிவுகளிலும் மாணவிகளுக்கு புளோர், வால்டிங் டேபிள், பேலன்ஸிங் பீம், டேபிள் வால்ட், உள்ளிட்ட 4 பிரிவில் உள்ள விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் நவம்பர் மாதம் லக்னோவில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் செயலாளர் சுகுமாரன், தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் பொருளாளர் கண்ணன், தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் துணை செயலாளர் ராகுல் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.