search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ராமாக்காள் ஏரி அருகே  1.34 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கால்வாய் கட்ட பூமி பூஜை
    X

    மழை நீர் வடிகால் கால்வாய் கட்ட பூமி பூஜையை எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    தருமபுரி ராமாக்காள் ஏரி அருகே 1.34 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கால்வாய் கட்ட பூமி பூஜை

    • ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
    • இந்த பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி ராமாக்காள் ஏரி அருகே உள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி மழை நீர் தேங்கி சாலைகள் சேதம் அடைவதுடன் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்கள். இதனைத் தடுக்க நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு எஸ்.பி. வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த பணிகளை தரமாகவும், வேகமாகவும் முடித்து நெடுஞ்சாலையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற் காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஏரிக்கரை அருகே தேங்கி நிற்கும் மழை நீரையும் அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், நெடுஞ்சாலை ஆய்வாளர் அபிமன்னன், பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்டத் துணைத் தலைவர் முருகன், சிறப்பு மாவட்ட தலைவர் சின்னசாமி, நகர செயலாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கடேசன், நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் கலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×