search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளியில்ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகள் தொடக்கம்
    X

    தருமபுரி தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளியில்ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகள் தொடக்கம்

    • விஜய்’ஸ் ஏஸ் அகாடமியின் ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகள் தொடக்க விழா மற்றும் மேல்நிலை கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • எதிர்காலத்தில் சிறந்த ஆடிட்டராக உரு வாவது பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோ ர்களை ஊக்க ப்படுத்தினார்கள்.

    தருமபுரி

    தருமபுரியில் இயங்கி வரும் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னி லையில் விஜய்'ஸ் ஏஸ் அகாடமியின் ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகள் தொடக்க விழா மற்றும் மேல்நிலை கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர்.

    காலையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழு மத்தின் தலைவர் டி.சி.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    தாளாளர் மீனா இள ங்கோவன், இயக்குநர்கள் பிரேம், சினேகாபிரவீன் முதன்மை நிர்வாக அலுவலர் சந்திரபானு, மூத்த முதல்வர் நாராயண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக, சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜமுனா வரவேற்றார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இந்திய அளவில் முதல், நான்கு, பத்தாம் இடங்களை ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சிப் பெற வைத்த சத்தியஸ்ரீ பூமிநாதன் சேர்மன் பங்கேற்று பள்ளியில் படிக்கும் போதே ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக " நான் ஐ.ஏ.எஸ். என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கான சிறப்பு வழிகாட்டு தல்களை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் நந்தகுமார் சிருஷ்டி அகாடமி பங்கு தாரர் பட்டய கணக்காளர் அடிப்படை கல்வி பெறுவது மற்றும் எதிர்காலத்தில் சிறந்த ஆடிட்டராக உரு வாவது பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோ ர்களை ஊக்க ப்படுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் நீட் தேர்வை எளிதில் எதிர்கொள்வது எப்படி மேல்நிலைக் கல்வியில் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்று தலைமை விருந்தினர் அஸ்வின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து மாண வர்களை ஊக்கப்படு த்தினார்.

    இந்நிகழ்ச்சியில் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் விஜய்ஸ் ஏஸ் அகாடமி சார்பில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின் தலைவர் இளங்கோவன், விஜய்'ஸ் ஏஸ் அகாடமியின் ஜூனியர் ஐ.ஏ.எஸ் வகுப்புகளை துவங்கி வைத்து பெற்றோ ர்கள் மற்றும் மாணவர்க ளிடையே சிறப்புரை யாற்றினார்.

    நிகழ்ச்சியில் பெற்றோ ர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகம் மற்றும் நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் அலு வலர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

    முடிவில் சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வர் மேரி சாமுவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×