என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி, விருபாட்சிபுரம் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் லட்ச தீப விழா
Byமாலை மலர்13 Nov 2022 3:03 PM IST
- ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் லட்ச தீப விழா நடைபெற்றது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
தருமபுரி
தருமபுரி விருபாட்சிபுரம் கிருஷ்ண ஆஞ்சநேய ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் லட்ச தீப விழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
கார்த்திகை தாமோதர ஹோமமும், துளசி பூஜையும் நடைபெற்றது. ஸ்ரீ பாண்டுரங்க விட்டலா பஜனை குழுவினரால் பல்வேறு தாசர்களின் பாடல்கள் பாடப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவில் முழுவதும் லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுப்பி புத்திகே மடம் தருமபுரி கிளை தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் வெங்கட்ராமன், ராமமூர்த்தி, கிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
X