என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்
- மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது
- மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மாவட்ட கலெக்டர்முரளிதரன், முன்னிலையில், கண்காணிப்பு குழு தலைவரும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியின் கீழ் துறை ரீதியாக செயல்படுத்த ப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை மற்றும் செலவினங்கள் ஆகியன குறித்தும், நடை பெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
அலுவலர்கள் துறைகள் ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியன தொட ர்பாக ஆண்டறிக்கையின்படி விரிவாக எடுத்துரைத்தனர்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மத்திய அரசின் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மாநில அரசுடன் இணைந்து அத்திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்த ப்பட்டு வருகிறது என்ப தனை கண்காணித்து அத்திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொதுமக்களிடையே சென்றடையும் வகையில் துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறீர்கள்.
அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதே னும் குறைபாடுகள் இரு ப்பின் அரசு அலுவலர்கள் எனது கவனத்திற்கு உடனடி யாக கொண்டு வரும் போது அதற்கான உரிய நட வடிக்கைள் மேற்கொள்ள ப்படும். அதனைப்போன்று, ஊராட்சி மன்றத்தலை வர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன்மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை அலுவ லர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி எம்.பி தெரிவித்தார்.