என் மலர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க., மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி
- இயக்க பணிகளை பெருமைப்படுத்துகிற நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
- மாநில இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுகூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசினார்.
வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் நந்தினி, பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கவுன்சிலர் பி.ஆர்.செந்தில்குமார், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி, பேரூர் செயலாளர்கள், மாநகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தாய்மொழியான தமிழை காக்க, உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தை வருகிற 25-ந் தேதி திருப்பூர், பல்லடம்,அவினாசி ஆகிய இடங்களில் மாநில மாணவரணி சார்பில் நடத்துவது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
எழுச்சியோடு பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். தி.மு.க.வின் மூத்த முன்னோடிகள் 70 வயதை கடந்த 6 உறுப்பினர் அட்டைகளை வைத்துள்ள, தி.மு.க.வுக்காக உழைத்த முன்னோடிகளுக்கு திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் பொற்கிழி வழங்கி அவர்களின் இயக்க பணிகளை பெருமைப்படுத்துகிற நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.
இதில் மாநில இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை உரிய காலத்துக்குள் மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.