என் மலர்
உள்ளூர் செய்திகள்
சொத்து தகராறில் டாக்டர் குடும்பத்தினர் மீது தாக்குதல்
- தருமபுரியில் சொத்து தகராறில் டாக்டர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- சொத்து பிரச்சனை தொடர்பாக சம்பவம்.
தருமபுரி நகர் குப்பாண்டி தெருவை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன். இவரது மனைவி டாக்டர் இளவரசி சங்கவை தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் ராம கிருஷ்ணன் என்பவரிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை கிரையம் செய்ய அட்வான்சாக ரூ.11 லட்சம் பணம் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட ராமகிருஷ்ணன் இறந்துள்ளார்.
இந்நிலையில் ராமகிருஷ்ணனுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இறந்த ராமகிருஷ்ணன் உறவினர்கள் நாங்கள் தான் வாரிசு எனக்கூறி டாக்டர் தம்பதிகளிடம் சிலர் பணம் கேட்டு அடிக்கடி வந்து தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஒரு கும்பல் டாக்டர் தம்பதிகளின் வீட்டுக்கதவை தட்டி வீட்டுக்குள் புகுந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
அப்பொழுது சத்தம் கேட்டு வந்த டாக்டரின் தாயார் சித்ரா (50 என்பவரை ஆயுதங்களால் மர்ம கும்பல் தாக்கியதோடு மேலும் பிரச்னைக்குரிய வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். இதில் சித்ராவின் பல் உடைந்தது. காயம் அடைந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த தகவல் அறிந்த எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில், கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.