என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சங்கரன்கோவிலில் குடிநீர் வினியோகம், வாறுகால் அகற்றும் பணி-நகராட்சி அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை சங்கரன்கோவிலில் குடிநீர் வினியோகம், வாறுகால் அகற்றும் பணி-நகராட்சி அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/19/1900986-1rajamla.webp)
சங்கரன்கோவிலில் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.
சங்கரன்கோவிலில் குடிநீர் வினியோகம், வாறுகால் அகற்றும் பணி-நகராட்சி அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- சங்கரன்கோவில் பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக வரவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கின்றது.
- கோடைகாலம் காரணமாக குடிநீர் வினியோகம் சீராக செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சங்கரன்கோவிலில் குடிநீர் வினியோகம், துப்புரவு பணி, வாறுகால் அகற்றும் பணி ஆகியவை குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேற்பார்வையாளர் கோமதிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், தற்போது சங்கரன்கோவில் பகுதிகளில் குடிநீர் வினியோகம் சீராக வரவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கின்றது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் தற்போது சங்கரன்கோவிலுக்கு வரும் குடிநீர் வரத்து கோடைகாலம் காரணமாக குறைந்துள்ளதால் குடிநீர் வினியோகம் சீராக செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதார பணிகள், வாறுகால் அகற்றும் பணிகள் ஆகியன முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டுமென ஆலோசனைகள் வழங்கி னார். இதில் ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.