search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய   காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்   -தருமபுரி எஸ்.பி. அதிரடி
    X

    விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவரிடம் போலீசார் விசாரித்த காட்சி.

    குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் -தருமபுரி எஸ்.பி. அதிரடி

    • அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • தருமபுரி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    அரூர்,

    அரூர் பகுதியில் குடியிருந்து வரும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் செய்தி சேகரிப்பு பணியை முடித்துவிட்டு கடந்த 2-ம் தேதி இரவு அரூர் நான்கு ரோடு பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் மிக அதிவேகமாக வந்து அரூர் வேளாண் கூட்டுறவு சங்கம் எதிரே அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    கார் மோதியதில் தலை, இடது கை, இடது கால் பகுதியில் காயம் ஏற்பட்டு அரூர் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    விபத்து ஏற்படுத்திய கார் எது என்பது குறித்து விசாரித்த போது அரூர் போக்குவரத்து காவல் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் என்பவர்தான் காரை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை காவல் நிலையம் பின்பு உள்ள ஒரு கோவிலில் மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.

    விபத்து ஏற்படுத்தியது குறித்து அவரிடம் கேட்டபோது செய்தியா ளரை தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படு கிறது.

    இதுகுறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் விசா ரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பிறகு அரூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபுவும் விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில் குடி போதையில் விபத்தை ஏற்படுத்தியதாக போக்கு வரத்து காவல் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தர வின் பேரில் தருமபுரி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×