என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வரத்து அதிகரிப்பால் தருமபுரியில் ரூ.25 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை வரத்து அதிகரிப்பால் தருமபுரியில் ரூ.25 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை](https://media.maalaimalar.com/h-upload/2022/07/07/1725268-002.jpg)
விற்பனைக்கு வந்துள்ள பட்டுகூடுகளை படத்தில் காணலாம்.
வரத்து அதிகரிப்பால் தருமபுரியில் ரூ.25 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது.
- நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்தில் 49 விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.
தருமபுரி,
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது.
இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள் வெள்ளை என தினசரி 5 முதல் 10 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்தில் 49 விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.
விவசாயிகள் 98 குவியல்களாக 4174 கிலோ பட்டுக்கூடுகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட வெண்பட்டு கூடுகள் அதிகபட்சம் கிலோ 681 ரூபாயும் குறைந்தபட்சம் 277 ரூபாயும் சராசரி 587 ரூபாய் என மொத்தம் ரூ.24 லட்சத்து 54 ஆயிரத்து 151 ரூபாய்க்கு விற்பனையானது.