என் மலர்
உள்ளூர் செய்திகள்
பித்தளை பாத்திரங்களின் பயன்பாடு குறைந்ததால் - அழியும் ஈயம் பூசும் தொழில்
- வீடு, கோவில், சத்திரம் என அனைத்து பகுதிகளிலும், பித்தளை பாத்திரம் பயன்பாடு அதிகளவு இருந்தது.
- ஈயம் பூசுவது குறித்து தெரியாத சூழல் உள்ளது.
உடுமலை :
வீடுகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் என அனைத்திலும் பித்தளை, செம்பு பாத்திரங்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தன.இதில் பித்தளை பாத்திரங்களை ஈயம் பூசாமல் பயன்படுத்த முடியாது. பயன்படுத்தும் போது பூசப்பட்ட ஈயம் தேயும் போது, மீண்டும் பூச வேண்டும். இதனால் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் தொழில் சிறப்பாக இருந்தது.
20 ஆண்டுக்கு முன்பு வரைஉடுமலை குட்டைத்திடலில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டறைகள் அமைத்து இருந்தனர். ஆனால் தற்போது சில்வர், குக்கர், நான்ஸ்டிக் என பாத்திரங்களின் பயன்பாடு மாறியதால் அதிக விலை, பராமரிப்பு என உள்ள பித்தளை பாத்திரங்களின் பயன்பாடு பெருமளவு குறைந்தது.
திருமண மண்டபங்கள், கோவில்கள், பள்ளிவாசல்களில், பெரிய அளவிலான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில்அதிக எடை, பராமரிப்பதில் சிரமம் உள்ளிட்ட காரணங்களினால் இங்கும் தற்போது பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் ஈயம் பூசுவதும் அரிதாகி வருகிறது.இது குறித்து ஈயம் பூசும் தொழிலாளி அண்ணாமலை கூறியதாவது:-
வீடு, கோவில், சத்திரம் என அனைத்து பகுதிகளிலும், பித்தளை பாத்திரம் பயன்பாடு அதிகளவு இருந்தது. அதனால் ஈயம் பூசும் தொழிலும் சிறப்பாக இருந்தது.தற்போது பயன்பாடு பெருமளவு குறைந்து திருமண மண்டபம், கோவில் மற்றும் பள்ளிவாசல்களில் மட்டும் உள்ளது.பித்தளையில் உணவு சமைக்கும் போது, தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உணவும் கெடாது. சூடும் அதிக நேரம் இருக்கும். ஈயம் பூசுவதற்கு, நவச்சாரம், நாக தகடு உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகிறது. ஈயம் காய்ச்சப்பட்டு நவச்சாரம் அழுக்கு எடுக்கவும், ஈயம் ஒட்ட நாகதகடு பயன்படுத்தப்படுகிறது. ஈயத்தை தீயில் காய்ச்சிதிரவமாக மாற்றி குளிர்விக்கப்படுகிறது.
பின்னர் பாத்திரத்தையும் தீ வழியாக சூடாக்கி, நவச்சாரம், ஈயம், நாக தகடு கலந்த கலவை பூசப்படுகிறது. ஈயம் 100 கிராம் 550 ரூபாயாக உயர்ந்துள்ளது.பாத்திரங்கள் பெருமளவு குறைந்துள்ளதால்ஒரு சில மட்டுமே ஈயம் பூச வருகிறது. இத்தொழில் செய்பவர்கள் யாரும் தற்போது இல்லை. வரும் தலைமுறைக்குபித்தளை பாத்திரங்கள், ஈயம் பூசுவது குறித்து தெரியாத சூழல் உள்ளது.இவ்வாறுஅவர் கூறினார்.