என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
- கூட்டத்திற்கு அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார்.
- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கழக உரையாற்றுகிறார்.
தருமபுரி,
தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கழக உரையாற்றுகிறார்.
இதில் இந்நாள், முன்னாள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் இதில் கலந்துகொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டுவிழா குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்தும் விவாதிக்கபட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.