என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் மலைமாடுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்
- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
- மலைமாடுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விவசாயிகள் கூறியதாவது:-
தேனி மாவட்ட வனப்பகு தியில் மலைமாடுகளுக்கு வனத்துைறயினர் மேய்ச்சல் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் மலைமாடுகள் நலிவடைந்து வருகின்றன.
இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மாடு இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரம் நிர்ணயித்து மலைமாடுகளை அரசே ஏற்க வேண்டும். கோரையூத்து பகுதியில் விவசாயிகள் வளர்த்து வந்த 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. ஆனால் இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை.
மேகமலை வனப்பகு தியில் உள்ள பட்டா நிலங்களில் ஏலக்காய், காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேல்மணலாறு வனப்பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு சென்று வரவும் தோட்டத்தில் புதிதாக ஏலக்காய் நாற்றுகளை நடவு செய்யவும் வனத்துறையினர் தடை விதிக்கின்றனர்.
அகமலை ஊரடி ஊத்துக்காடு மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின் வினியோகம் தடை ஏற்பட்டு ள்ளது. பராமரிப்பு பணி மேற்கொள்ள வனத்துறை யினர் அனுமதிக்க வில்லை. கண்ணக்கரை- மறைகர் மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க விவசாயிகள் சார்பில் 12 ஏக்கர் பட்டா நிலங்கள் அரசுக்கு வழங்கப்பட்டு ள்ளது. சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறை அனுமதி வழங்காததால் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அகமலை அரசு பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.