என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே பகல் நேரங்களில் கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி

- பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
- இரவு நேரத்தில் தோப்பில் கரடி புகுந்து கரையான்களை திண்பது போன்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
கடையம்:
கடையம் யூனியனுக்குட் பட்டது அடைச்சாணி ஊராட்சி. இக்கிராமத்தின் அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு மலையான் குளம் கிராமத்தில் இருந்து விவசாயிகள் தினந்தோறும் சென்று வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பொத்தை பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் பகல் நேரங்களில் பொத்தை பகுதியில் கரடிகள் அதிக மாக சுற்றி திரிவதால், இப்பகுதியின் வழியே விவசாயம் செய்ய, அடைச் சாணி வயல்வெளிகளுக்கு செல்ல மிகவும் அச்சமாக உள்ளதாக அப்பகுதி விவ சாயிகள் கருத்து தெரி வித்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள பென்சிகர் என்பவரின் தோப்பில், இரவு நேரத்தில் கரடி புகுந்து அங்குள்ள பிளாஸ்டிக் பொருள்களை சேதப் படுத்தியும், கரையான்களை திண்பது போன்ற வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.