என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/18/1883435-99-porattam.webp)
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
![DPIVijiBabu DPIVijiBabu](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இதற்கு மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், பழனி, மாவட்ட தலைவர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் ராஜு, மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை, மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்.
ஆரப்பாட்டத்தில் தமிழ்நாடு நிலம் ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.