என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வான சிறுவனுக்கு நிதி உதவி-கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. வழங்கினார்
- கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் மகேந்திரன் ஸ்மித் வெற்றி பெற்றார்.
- கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார்.
செங்கோட்டை:
கடையநல்லூர் அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் 12 வயதான மகேந்திரன் ஸ்மித். இவர் கொடைக்கானலில் நடைபெற்ற யோகா போட்டியில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற மகேந்திரன் ஸ்மித் தகுதி பெற்றார்.
இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக அதில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் தந்தை சந்திரசேகர் தமிழக அரசுக்கு நிதி உதவி அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் சர்வதேச போட்டிக்கு செல்ல தேவையான செலவிற்கு தன்னுடைய பங்களிப்பாக ரூ. 25 ஆயிரம் ரொக்கமாக மாணவனிடம் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியின் போது மாணவனின் தந்தை சந்திரசேகர், யோகா பயிற்சி ஆசிரியா் ஆகியோர் உடன் இருந்தனர்.