என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே பாதைக்கு அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சிறை பிடித்த சவுளுப்பட்டி மக்கள் தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே பாதைக்கு அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சிறை பிடித்த சவுளுப்பட்டி மக்கள்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/16/1792850-villagepeoples.jpg)
அதிகாரிகளை சிறை பிடித்த சவுளுப்பட்டி மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட காட்சி.
தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே பாதைக்கு அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சிறை பிடித்த சவுளுப்பட்டி மக்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே பாதையை அதிகாரிகள் அளவீடு செய்ய முடிவு செய்து வந்தனர்.
- அப்பகுதி மக்கள் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை அனைவரும் ஒன்று திரண்டு சி றை பிடித்தனர்.
தருமபுரி,
கடந்த 1901-ம் ஆண்டு முதல் 1945- வரை தருமபுரியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தூரமுள்ள மொரப்பூர் வழியாக சென்னைக்கு ரெயில் பாதை வந்தது. பின்னர் அந்த பாதை நீண்ட வருடங்களாக அப்பாதையை புதுப்பித்து தருமபுரியில் இருந்து சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு அன்றைய மத்திய அரசு சுமார் 388 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தருமபுரியில் இத்திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இத்திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பல முறை வேண்டுகோள் விடுத்த நிலையில் தருமபுரி நகரில் பழைய இருப்பு பாதை அமைந்துள்ள பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும், மேலும் அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கியும், போதிய பணம் வங்கி கணக்கில் செலுத்தியதால் இப்பணிகள் செயல்படாமல் இருந்தது.
தற்போது தருமபுரி-மொரப்பூர் புதிய ரெயில் பாதை பணிகளின் நில அளவு எடுக்கும் பணி செயல்படுத்தப்பட்டு அதற்கான நிதி 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தருமபுரி அருகே உள்ள சவுளுப்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சவுளுப்பட்டி கிராமத்தில் தருமபுரி-மொரப்பூர் ரெயில்வே பாதையை அதிகாரிகள் அளவீடு செய்து முடிவு செய்தனர். அதனையறிந்த அப்பகுதி மக்கள் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை அனைவரும் ஒன்று திரண்டு சிறை பிடித்தனர்.
அப்போது ரெயில்வே பாதை வேண்டும், ஆனால் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்றும், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் வீடுகளை இடிக்காமல் காலியிடம் இருக்கும் பகுதியில் ரெயில்வே பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். அதிகாரிகளின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.