search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவலர் பணியிடங்களுக்கானஉடற் தகுதி தேர்வை டிஐஜி நேரில் ஆய்வு
    X

    இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற் தகுதி தேர்வினை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, தருமபுரி எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், ஏ.டி.எஸ்.பி. அண்ணாமலை, ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். 

    காவலர் பணியிடங்களுக்கானஉடற் தகுதி தேர்வை டிஐஜி நேரில் ஆய்வு

    • நேற்று 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்ததில் 344 பேர் கலந்து கொண்டனர்.
    • 60 தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்கட்ட தேர்வு நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் தீயணைப்பு படை வீரர் மற்றும் வன காவலர் பணியிடங்களுக்கான உடற் தகுதி தேர்வு துவங்கியது. நேற்று 390 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டி ருந்ததில் 344 பேர் கலந்து கொண்டனர். அதில் 295 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு படை வீரர் மற்றும் வன காவலர் பணியிடங்களுக்கு உடற்பகுதி தேர்வு நடக்கிறது.

    இத்தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1138 ஆண் தேர்வர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதில் 60 தேர்வர்கள் முன்னாள் ராணுவத்தினர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு முதல்கட்ட தேர்வு நடந்தது. 400 பேர் இதில் பங்கேற்றனர்.

    இதில் 295 பேர் இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பளவு அளவிடுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது.

    இந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற் தகுதி தேர்வினை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், ஏ.டி.எஸ்.பி. அண்ணாமலை, ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

    Next Story
    ×