என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கபடி போட்டியில் வெற்றி பெற்ற கோப்பைகளுக்கு ஆயுத பூஜை செய்த விளையாட்டு வீரர்கள்
Byமாலை மலர்7 Oct 2022 3:01 PM IST
- முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, என கோப்பைகளை பெற்றுள்ளனர்.
- விளையாட்டு மைதானத்தில் வைத்து ஆயுத பூஜை செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கபடி குழுவில் உள்ள விளையாட்டு வீரர்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், மதுரை, உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சென்று முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, என கோப்பைகளை பெற்றுள்ளனர்.
சமீபத்தில் நடந்த பிரதமர் மோடி கபடி போட்டியில் இந்த குழு முதல் பரிசை வென்றுள்ளது. இந்த குழுவினர் தாங்கள் வெற்றி பெற்ற கோப்பைகளை தருமபுரி விளையாட்டு மைதானத்தில் வைத்து ஆயுத பூஜை செய்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
Next Story
×
X