search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் 13,053 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்
    X

    விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் ரவிச்சந்திரன், ராஜா எம்.எல்.ஏ. உள்ளனர். 

    சங்கரன்கோவிலில் 13,053 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்-அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்

    • எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி.
    • இந்த வயது என்பது உங்களுக்கு மிக முக்கியமான வயதாகும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கல்வித்துறை சார்பில் தென்காசி மாவட் டத்தில் 53 அரசு பள்ளிகள், 43 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 13,053 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர்

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், யூனியன் துணை சேர்மன் செல்வி, நகராட்சி கவுன்சி லர் உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத ன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து தனுஷ்குமார் எம்.பி., தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விலையில்லா சைக்கிள்

    இதில் சிறப்பு அழைப்பாள ராக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விலையில்லா சைக்கிள், பள்ளி சீருடை, மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகின்றார்.

    பல்வேறு திட்டங்கள்

    மாணவ, மாணவிகள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த வயது என்பது உங்களுக்கு மிக முக்கியமான வயதாகும். இந்த வயதில் கல்வி உள்ளி ட்ட அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல தொரு இடத்தை அடைய வேண்டும்.

    திராவிடம் என்பது சுயமரியாதையை கற்று கொடுத்த இயக்கம். சுய மரியாதை என்பது ஆண்களும்- பெண்களும் சமம் என உணர்த்திய இயக்க மாகும். முதல்-அமைச்சர் மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அயராது உழைத்து வருகின்றார். அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், யூ.எஸ்.டி. சீனிவாசன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம், புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா சவுந்தர பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் பத்ம நாதன், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட அணி அமைப்பா ளர்கள் கே.எஸ்.எஸ். மாரி யப்பன், முகேஷ், குருவசந்த், அப்பாஸ்அலி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், கார்த்தி, ராஜராஜன், வீரமணி, ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    Next Story
    ×