என் மலர்
உள்ளூர் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள்
- வீடுகட்டுவதற்கு கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 222 மனுக்கள் வரப்பெற்றன.
- 52 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான இச்சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தில் பதிவு, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை (UDID) பதிவு, பராமரிப்பு உதவித் தொகை, வங்கிகடன் மான்யம், உதவி உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு பதிவு, புதுபித்தல், வேலைவாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, சுயதொழில் புரிவதற்கு வங்கிகடன் மற்றும் வீடுகட்டுவதற்கு கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 222 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் கலெக்டர் சாந்தி அவர்கள் கோரிக்கை மனு அளித்த இன்றைய தினமே 7 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.22,600- மதிப்பிலான காதொலி கருவிகள் மற்றும் சக்கர நாற்காலியினையும், நலத்திட்டங்கள் வேண்டி கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளிகளில் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பில் இலவச தையல் எந்திரங்களையும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.19 லட்சம் மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என மொத்தம் 52 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.19.19 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இச்சிறப்பு மாற்றுத்திறனா ளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், உள்ளிருப்பு மருத்துவர், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.