என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தாயுடன் அடிக்கடிதகராறு: தந்தையை அடித்து கொல்ல முயன்ற மகன் தாயுடன் அடிக்கடிதகராறு: தந்தையை அடித்து கொல்ல முயன்ற மகன்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/25/1767213-kolaimuyarchi22.jpg)
தாயுடன் அடிக்கடிதகராறு: தந்தையை அடித்து கொல்ல முயன்ற மகன்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- இதனை பார்த்த பேரரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 39) இவருக்கு மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சிலநாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் 2 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. .இதை பார்த்த அவரது மகன் பேரரசு தினமும் இப்படி பிரச்சனை செய்து கொண்டிருக்கிறாயே என்று ஆவேசப்பட்டு அருகில் இருந்த கட்டியை எடுத்து துரைசாமியின் தலையில் ஓங்கி அடித்தார். இனிமேல் அம்மாவிடம் தகராறு ஈடுபட்டால் இந்த கட்டையால் தாக்கினார். இதில் துரைசாமி படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த பேரரசு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த துரைசாமியை உறவினர்கள் மீட்டு சின்ன சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அங்கிருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துரைசாமியின் அக்கா சுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்