என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/07/20/1918392-kootam.jpg)
இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பொதுக்குழு கூட்டம் கோட்ைடயில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
- கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஹாஜி அன்வர்பாஷா தலைமை வகித்தார்.
தருமபுரி,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தருமபுரி மாவட்ட புதிய நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஹாஜி அன்வர்பாஷா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நிசாமுதீன் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில பொது செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஹாஜி முகமது அபூபக்கர் கலந்து கொண்டு பேசினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சேலம் அன்சர் பாஷா, சேலம் மாவட்ட துணை செயலாளரும் வழக்கறிஞருமான ஷாகுல் அமீத், மாநில யூத் லீக் தலைவர் பள்ளப்பட்டி யூனுஸ் சாஹெப், இளைஞர் அணி தேசிய துணை தலைவர் ஜக்கிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தலைவராக ஹாஜி சையத் அன்வர் பாஷா, மாவட்ட முதன்மை துணை தலைவராக நிசாமுதீன், மாவட்ட செயலராக சிராஜீதீன், மாவட்ட பொருளாளராக இளம்பிறை சுலைமான், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக அலாவுதீன், மாவட்ட அணி அமைப்பாளராக இலியாஸ்பாஷா, உலாம அணி அமைப்பாளராக ஷபீல் அகமது, வனிதா அணி மாவட்ட அமைப்பாளராக ஆயிஷா ஜாஸ்மின் மற்றும் 2 துணை தலைவர்கள், 2 துணை செயலாளர்கள், மாவட்ட துணை தலைவராக அப்துல் ரஷீத், அரூர், மாவட்ட துணை செயலா–ளராக பாபு மற்றும் ரிஸ்வான், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளராக ரகமதுல்லா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை இளம்பிறை சுலைமான், அலாவுதீன், ஆகியோர் செய்து இருந்தனர்.