என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்த நாள் விழா அதியமான் அவ்வை சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடிய ஜி.கே.மணி தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்த நாள் விழா அதியமான் அவ்வை சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடிய ஜி.கே.மணி](https://media.maalaimalar.com/h-upload/2023/10/02/1959581-dpibirthday.webp)
தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்த நாளையொட்டி இன்று நல்லம்பள்ளியில் உள்ள அதியமான், அவ்வையார் சிலைகளுக்கு பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.
தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்த நாள் விழா அதியமான் அவ்வை சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாடிய ஜி.கே.மணி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தருமபுரி மாவட்டத்திறகு 59-வது பிறந்த நாள் கொண்டாப்பட்டது.
- எம். ஏல்.ஏக்கள் அதியமான்- அவ்வை சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்
தருமபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இன்று தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்தநாள் மாவட்டம் முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.
அதனை கொண்டாடும் வகையில் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அதியமான் அவ்வையார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் அதியமான் மற்றும் அவ்வையார் சிலை களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கான 59-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த கட்சித் தொண் டர்கள் மற்றும் இப்பகுதி வளாகத்தில் போட்டித் தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட வருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நி கழ்ச்சியில் நல்லம் பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பா.ம.க. அமைப்பு செயலாளர் சண்முகம், மாநிலத் துணைத் செயலாளர் சாந்தமூர்த்தி, பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செய லாளர் ஓ.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர்கள் வெங்கடே சன், சிவபிரகாசம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் முத்து வேல், குப்பன், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.