என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாத்தா- பாட்டிகள் தினம் கொணடாடிய போது எடுத்த படம்.
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தாத்தா- பாட்டிகள் தினம்
- பள்ளி தாளாளர் ஆ.ஜெயா சண்முகம் தலைமையில் தாத்தா, பாட்டிகள் தினம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஆ.ஜெயா சண்முகம் தலைமையில் தாத்தா, பாட்டிகள் தினம் நடை பெற்றது. ஆசிரியை இசக்கியம்மாள் வரவேற்று பேசினார். மாணவ- மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் வந்திருந்து பேரக்குழந்தைகளை பூக்களை தூவி ஆசீர்வாதம் செய்த னர். மாணவ- மாணவிகளின் சிறப்புரை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 'தாத்தா பாட்டிகள்' தினத்தை பற்றி ஆசிரியை உதயம்மாள் சிறப்புரையாற்றினார். கிருஷ்ண ஜெயந்தி விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளும் வழங்கப் பட்டது. பழைய பாடல்களுக்கு தாத்தா, பாட்டிகள் தங்கள் பேரக்குழந்தைகளுடன் ஆடி மகிழ்ந்தனர். ஆசிரியை நாகேஸ்வரி நன்றி கூறினார்.
Next Story