search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
    • வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றில் செல்லும் நீரளவை கணக்கிடும் பொருட்டு, நீர் அளவீட்டுக் கருவிகள் அமைத்திடவும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் முன் வைத்தனர்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,

    வேளாண்மை விரிவாக்க மையங்களில் நடப்பு பருவத்திற்கு விவசாயிகளுக்கு விநியோகம் செய்திடும் பொருட்டு நெல் விதைகள் 61 மெ.டன்னும், பயறு வகை விதைகள் 35 மெ.டன்னும், எண்ணெய் வித்துப் பயிர் விதைகள் 4 மெ.டன்னும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பயறு விதைகள் 50 சதவிதம் அல்லது கிலோ ரூ.50, எண்ணெய்வித்து விதைகள் 50 சதவிதம் அல்லது கிலோ ரூ.40- என்ற மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. துவரையில் வரிசை விதைப்பு மேற்கொள்ள எக்டருக்கு 50 (அ) 4500 வீதம் 200 எக்டருக்கு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உளுந்து பயிரில் தொகுப்பு செயல் விளக்கம் 400 எக்டரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1026 மெ.டன்னும், பொட்டாஷ் 644 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 2850 மெ.டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உர நிறுவனங்களை தொடர்புகொண்டு மாத ஒதுக்கீட்டின்படி சப்ளை செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், உரம் கிடைப்பதில் பிரச்சினை, ஒரு உரத்துடன் பிற இணை பொருட்கள் வாங்க நிர்பந்திப்பது மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது பற்றி வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், எதக்கைப்பூண்டு, சணப்பு போன்றவை வேளாண்மை துறையின் மூலம் வழங்கிடவும், மழையினால் சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையினை விரைந்து வழங்கிடவும், மேலும், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாய நிலங்களை உழவு மற்றும் கவாத்து செய்திட எந்திரங்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்திடவும், ஆவின் பால் விலையை உயர்த்தி தருமாறும், அணைக்கரைப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளதால் அங்கு பாலம் அமைத்துதரவும்,

    ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 30 கண்மாய்களுக்கும் தண்ணீர் நிரப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பெரியகுளம் நல்லகருப்பன்பட்டி பகுதியில் உள்ள கண்மாயில் மழையினால் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்து தரவும், வருசநாடு பகுதியில் மின் தடை ஏற்படுவதால் அரசு புறம்போக்கு நிலத்தில் துணை மின் நிலையம் அமைத்து மின் தடையினை சரிசெய்திடவும், அகமலை பகுதியில் விரைந்து மின்சார வசதி செய்துதரவும், தும்மக்குண்டு முதல் வாலிப்பாறை வரை சாலை வசதி ஏற்படுத்திதரவும்,

    மேலும் பி.டி.ஆர் வாய்க்கால் பாசன கண்மாய், அம்பாசமுத்திரம் பாலகிருஷ்ணா கண்மாய் பகுதியில் முள் மரங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், பெரியகுளம் வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் உபஆறுகளான கல்லாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு காலங்களில் ஆற்றில் செல்லும் நீரளவை கணக்கிடும் பொருட்டு, நீர் அளவீட்டுக் கருவிகள் அமைத்திடவும், போன்ற பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் முன் வைத்தனர்.

    Next Story
    ×