என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் அரசு நலத்திட்டஉதவிகளை ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் வழங்கினார். அருகில் தாசில்தார் இளவரசன், ஒன்றிய செயலாளர் ரவிதுரை உள்ளனர்.
விக்கிரவாண்டியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 140 பேருக்கு இலவச மனைபட்டா

- விக்கிரவாண்டியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 140 பேருக்கு இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.
- ரூ. 19 லட்சம் மதிப்பீ ட்டில் 140 பேருக்கு இலவச மனைப்பட்டா, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், வேளாண்மை, தோட்டக் கலைத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, பொது மக்களி டமிருந்து குறைகேட்பு மனுக்களை பெற்றார். பின்னர் உடனடி தீர்வாக ரூ. 19 லட்சம் மதிப்பீ ட்டில் 140 பேருக்கு இலவச மனைப்பட்டா, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், வேளாண்மை, தோட்டக் கலைத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், தனி தாசில்தார் கணேஷ், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், தோட்டக்கலைத்துறை அலுவலர்அனுசுயா, வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், ராஜேஷ், திருமதி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை, கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்திராசன், ஊராட்சி மன்ற தலைவி காந்தரூபி வேல்முருகன், தொழில் நுட்ப அணி ரகுபதி உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.