என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பெரியகுளம், ஆண்டிபட்டியில் கொட்டித்தீர்த்த மழை; கும்பக்கரை அருவிக்கு செல்ல மீண்டும் தடை

- நேற்று பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
கூடலூர், மார்ச்.29-
தேனி மாவட்டத்தில் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் கேரளாவின் ஒருசில மாவட்டங்களிலும் கோடைமழை பெய்து வருகிறது.
நேற்று பெரியகுளம், தேவதானப்பட்டி, ஆண்டி பட்டி, கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதி களில் சுமார் 1 மணி நேரத்து க்கும் மேலாக கனமழை பெய்தது. அதன்பிறகும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சோத்துப்பாறை, கும்பக்கரை, முருகமலை, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
வடுகப்பட்டி, முதலக்க ம்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதா னப்பட்டி, புதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடைக்கானல் அடுத்துள்ள வட்டக்கானல், வெள்ளக்கவி பகுதியில் பெய்த கன மழை காரண மாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று நீர்வரத்து குறைந்த நிலையில் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நேற்று பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக அருவியில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.65 அடியாக உள்ளது. வரத்து 72 கன அடி. திறப்பு 256 கன அடி. இருப்பு 2024 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 54.17 அடி. வரத்து 349 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2586 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 49.53 அடி. வரத்து 13 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 7, தேக்கடி 15.6, கூடலூர் 1, சண்முகாநதி அணை 4.6, உத்தமபாளையம் 1.2, வைகை அணை 30.2, மஞ்சளாறு 10, பெரியகுளம் 3, வீரபாண்டி 2.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது