என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி மாவட்டத்தில் கன மழை கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
- கனமழையால் பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பிய நிலையில் வைகை, முல்லைப்பெரி யாறு, கொட்டக்குடி, வராக நதி, உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
- கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று இரவு கன மழை பெய்தது. சாரலாக தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் சாலை களில் தண்ணீர் பெருக்கெ டுத்து ஓடியது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலை கள் நிரம்பிய நிலையில் வைகை, முல்லைப்பெரி யாறு, கொட்டக்குடி, வராக நதி, உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இரு ந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கொடைக்கா னலில் பெய்த கன மழையால் அருவியில் வெள்ளப்பெ ருக்கு ஏற்ப ட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்ட தாக வனத்துறையினர் அறிவித்தனர். இதே போல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 134.20 அடியாக உள்ளது. அணைக்கு 587 கன அடி நீர் வருகின்றது. நேற்று வரை 1500 கன அடி நீர் திறக்க ப்பட்ட நிலையில் இன்று நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 1667 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டது.
வைகை அணையின் நீர் மட்டம் 69.49 அடியாக உள்ளது. நீர் வரத்து 2308 கன அடியாக அதிகரி த்துள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்து க்காக 1819 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கன அடி நீர் வருகிற நிலையில் 40 கன அடி நீர் பாசனத்துக்கும் 60 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படு கிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 30 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் பெரிய குளம், ஏ.வாடிப்பட்டி, வடுகபட்டி, தேவதான ப்பட்டி, லெட்சுமிபுரம், ஆண்டிபட்டி, உத்தமபாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டியது.
கூடலூர் 1.8, உத்தமபாளையம் 6.2, வீரபாண்டி 25.2, வைகை அணை 48.8, ஆண்டிபட்டி 47, அரண்மனைபுதூர் 37, போடி 3.6, மஞ்சளாறு 61, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 33 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.