என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நெல்லை மாவட்ட அணிகளுக்கு இடையேயான ஆக்கி லீக் போட்டிகள்-26-ந்தேதி தொடங்குகிறது

- போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம்.
நெல்லை:
ஆக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் மாவட்ட ஆக்கி லீக் போட்டிகள் வருகிற 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறு கிறது. போட்டியானது, வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல் 2 நிலை களை பெறுபவர்களுக்கு வெற்றிக்கோப்பைகளும், பங்கேற்பாளர்களுக்கு பங்கேற்பு கேடயங்களும், அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணிகளும் இதில் கலந்துகொள்ளலாம். கலந்துகொள்ள வயது வரம்பு ஏதும் இல்லை. நுழைவு கட்டணம் இலவசம். கலந்துகொள்ள விரும்பும் அணிகள் 99403 41508, 90430 36967 என்ற வாட்ஸ் அப்பில் 20-ந்தேதிக்கு முன்னர் அணியின் பெயர்களை முன்பதிவு செய்யவேண்டும். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ஆக்கி யூனிட் ஆப் நெல்லை நிர்வாகிகள் சேவியர், முருகேசன், பீர் அலி, டாக்டர் மாரிக்கண்ணன், ஜான்சன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.