என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காரைக்கால் தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம் காரைக்கால் தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/14/1881106-fireaccident.webp)
காரைக்கால் தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அருகில் இருந்தவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர்.
- காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நேரு நகர் டோபி காலனி தெருவை சேர்ந்தவர் சரவணன் டிரைவர். நேற்று வழக்கம்போல் சரவணன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மலமலவென எறிய தொடங்கியது. இதனால் காரைக்கால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில், தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சரவணனின் தாய் வாசுகியின் இருதய அறுவை சிகிச்சைக்காக வீட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், எலக்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.