என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே விபத்து மனைவி கண்முன்பு கணவன் பலி

- சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார்.
- திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
கடலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா மேல்சார் கண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 70). இவரது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை பாதூர் காந்திநகர் அருகே டீ குடிப்பதற்காக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பயணிகளும் டீ குடிக்க இறங்கினர். அந்த நேரத்தில் சிறுநீர் கழிக்க சாலையோரம் சென்ற சேகர் மீது திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் மனைவி கண் எதிரே கணவன் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.