என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
- ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இஸ்லாமியர்கள் துவா செய்து அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சார்பாக ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் சுபேதார் தலைமை வகித்தார்.
இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மற்றும் அ.தி.மு.க. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இஸ்லாமியர்கள் துவா செய்து அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், நகர செயலாளர்கள் பூக்கடை ரவி, நாட்டான் மாது, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பாமக மற்றும் ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.