என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் மீட்பு பணியை துரிதப்படுத்த ஐ.ஐ.டி. வல்லுனர்கள் வருகை
- அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று காலை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மண் சரிவு ஏற்பட்டு வீட்டினுள் சிக்கி இருக்கும் நபர்கள் குறித்து கேட்டறிந்தார். மழை பெய்து கொண்டே இருப்பதால் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிமக்களை முகாமில் தங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் மீட்பு படையினரிடம் விரைந்து செயல்பட வேண்டும்.
முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மீட்பு பணியை துரிதப்படுத்த சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்கள் 2 பேர் வருகிறார்கள். அவர்கள் வருகை பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவில் சிக்காமல் இருப்பதற்காக பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.