என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தம்மகவுண்டனூரில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
Byமாலை மலர்22 Oct 2022 3:40 PM IST
- தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.
- ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
பர்கூர்,
பர்கூர் ஒன்றியம், சிகரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட தம்மகவுண்டனூர் கிராமத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான இன்னுயிர் காப்போம், இல்லம் தேடிக் கல்வி, மக்களை தேடி மருத்துவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை, கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
இதை ஏராளமான பொதுமக்கள் பார்வை யிட்டனர்.
Next Story
×
X