என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதல் வாலிபர் பலி-3 பேர் படுகாயம்

- இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மன்னார் சுவாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் பாபு (35) டிங்கராக பணிபுரிந்து வருகிறார். இவரும் இவரது நண்பர் கிடங்கல் இரண்டு பகுதியைச் சேர்ந்த நீதி ராஜன் ஆகிய இருவரும் வேலை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எம். ஆர். எஸ். கேட் டே நைட் ஹோட்டல் அருகே வரு ம்போது அதே மார்க்கமாக வேகமாக வந்த இரு சக்கர வாகனம் இவர்கள் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இந்த விபத்தில் பாபு சம்பவ இடத்திலேயே பலத்த காயங்கள் அடைந்து உயிரிழந்தார். அவருடன் வந்த நீதிராஜன் படுகாய ங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த திண்டிவனம் தனியார் சட்டக் கல்லூரியில் பயிலும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த இறை தேசிகன் (20)மற்றும் தென்காசி பகுதிைய சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் படுங்காய ங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இந்த 3பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.